பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி... ஆசிரியர்கள் தவறு செய்தால் - எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை
- தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைந்தது.
- இந்நிலையில் பிளஸ் டூ விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்குகின்றன.
- மொத்தம் 79 மையங்களில் வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
- விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், மதிப்பெண் கூட்டலில் பிழைகள் ஏற்படாமல் இருக்குமாறும், கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மையங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.