"நிறைவேற்றுமா திமுக?" - ஜி.கே.மணி கேள்வி | GK Mani | PMK | DMK | Thanthi TV
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்த நிலையில், ஜி.கே.மணி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். வன்னியர்களின் பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும், அந்தத் தரவுகளைத் திரட்டி ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்கினால் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றுமா? என்றும், இப்போது உள்ளத் தடைகள் அனைத்தும் பாஜக அணியிலிருந்து பாமக வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.