சென்னையில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கொட்டிய மழை - குளுகுளுவென மாறிய சென்னை

Update: 2024-12-26 01:52 GMT

சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால், நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 30 வரை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த‌து. தரமணி, கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, எழும்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், ராயபுரம் உள்ளிட்ட மழை விட்டுவிட்டு பெய்த‌து.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்