சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வில் சுமார் 16 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 2000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது.
சென்னையில் வருகிற15ம் தேதி பல்வேறு அமைப்பினரும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவுள்ளனர்.
பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம், நீலாங்கரையில் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது.