சென்னையில் இருந்து இந்த மாவட்டத்துக்கு சிறப்பு ரயில் - வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2024-12-22 02:04 GMT

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை நாட்களில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 12.35க்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ,கோவில்பட்டி ,திருநெல்வேலி ,வள்ளியூர் ,நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு மதியம் 12- 15 மணிக்கு சிறப்பு ரயில் சென்று சேர்கிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மாலை 4-.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்று சேருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்