"வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது போல், நிலச்சரிவு ஏற்படும்" - எச்சரிக்கும் கிராம மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிம மண் எடுத்து செங்கல் சூளை செயல்படுவதால், வயநாடு போல் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சேட்டிலைட் புகைப்படத்துடன், பத்மநாபபுரம் சப் கலெக்டரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
வேளிமலை அடிவாரத்தில் கனிம மண்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுப்பதால், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதுபோல், வேளிமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் என பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.