கார் மோதி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி.. மளமளவென பற்றி எரிந்த பைக்... நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-22 01:59 GMT

நெல்லை மாவட்டம் தருவை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வன். கூலித்தொழிலாளியான இவர், மூன்றடைப்பு நான்கு வழிச்சாலையில், பைக்கில் சென்றார். அப்போது நாகர்கோயிலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார், எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜசெல்வன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் போது உராய்வு ஏற்பட்டு, ராஜசெல்வம் ஓட்டி வந்த பைக் தீப்பிடித்து எரிந்த‌து. சாலையில் சென்றவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நாகர்கோவில் சுசீந்திரத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்