தொடங்கியது சீசன்.. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Courtallam

Update: 2024-12-22 02:06 GMT

வார இறுதி நாட்களை முன்னிட்டு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக இருந்ததால் குழந்தைகளும் பெண்களும் ஆனந்த குளியல் போட்டடனர். தற்போது ஐயப்ப சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.

மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அருவியின் ஒரு ஓரத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்