நான் முதல்வன் திட்டம்... கிளாட் நுழைவு தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர் | Sivaganga
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கிளாட் நுழைவு தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர், தேசிய அளவிலான 24 சட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றில் பயில்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் அரசு பள்ளி மாணவர் கிஷோர் ராம், கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற சட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மாவட்ட அளவில் 53 பேர் எழுதிய தேர்வில் கிஷோர் ராம் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், அவருடைய அனைத்து படிப்பு செலவுகளையும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கவுள்ளது.