திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம் | Trichy
சின்னக்கடை வீதியை சேர்ந்த, திமுக பிரமுகர் சுரேஷ்குமார், அடகு நகைகளை மீட்டு விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் பங்குதாராக உள்ளார். இவருக்கு தாராநல்லூர் பகுதியில் சொந்தமான பாலபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இதில், பொருளாளராக பதவி வகித்து வரும் சுரேஷ்குமாரின் நண்பர், கோயிலுக்கு சொந்தமான இடத்தை விற்று விட்டதாக, கமிட்டியில் உள்ளவர்கள் சிலர் சுரேஷ்குமாரிடம் புகார் கூறியுள்ளனர். இந்தநிலையில், சுரேஷ்குமார் வீட்டில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்