ராணிப்பேட்டையில், பணியிட மாறுதலில் ஆசிரியை வேறு பள்ளிக்கு செல்வதை அறிந்து, மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் கதறி அழுதனர்.
ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில், சந்தான லட்சுமி என்ற ஆசிரியை கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். மாணவ, மாணவிகளுடன் இயல்பாக பழகி, எளிமையான முறையில் கற்பித்து வந்தததால் மாணவ, மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக இருந்து வந்துள்ளார். அந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவரை வேறு பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனை அறிந்த மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோரும், ஆசிரியை சந்தான லட்சுமியை வேறு பள்ளிக்கு மாற்றக் கூடாது என தலைமை ஆசிரியரிடம் செய்தனர். இருப்பினும் அவரை பணியிட மாறுதலில் செல்வதை தாங்கிக் கொள்ளாமல் மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. அவரை மீண்டும் அதே பள்ளிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.