பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு - 5 மணி நேர வேட்டையில் அதிரடி காட்டிய போலீசார்

Update: 2025-03-24 07:51 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, கத்தியை காட்டி மிரட்டி, பெண்ணிடம் செயின் பறித்துச் சென்ற கொள்ளையனை, போலீசார் 5 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். செந்தட்டியாபுரம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்