புதுச்சேரி அருகே உள்ள உலகிலேயே மிக உயரமான காளி கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான 72-அடி உயரம் கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கரா காளி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் வெயிலின் தாக்கம் குறைந்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் அக்னி வெயில் நிறைவடையும் நாளன்று 24 மணி நேரமும் இடைவிடாது தொடர் அபிஷேகம் நடைபெற்றது. 1008 லிட்டர் தயிர், பால், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு நடைபெற்ற இந்த அபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.