"குழந்தையை வெளியே எடுத்து சென்றால்.." - கடத்தலுக்கு செக் வைத்த சென்சார் கருவி | Govt Hospital

Update: 2024-05-21 03:20 GMT

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மகப்பேறு மருத்துவமனையில், குழந்தை கடத்தலை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பமான ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனையில், பிரசவத்திற்காக வரும் தாய்க்கு பச்சை நிறத்தில் அடையாள அட்டையும், அவரை பார்த்துக்கொள்ளும் உறவினருக்கு சிவப்பு நிற அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. மேலும் பிறந்த குழந்தையின் இடது காலில் நீல நிற பட்டை பொருத்தப்படுகிறது. இதன் மூலம் அடையாள அட்டை இல்லாமல் மகப்பேறு வார்டில் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால், வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் கருவி சத்தம் எழுப்பி எச்சரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்