``பட்ஜெட்டில் `தமிழ்நாடு' பெயர்..? அதுக்கு எங்களுக்கு 25 MP குடுத்துருக்கணும்.'' - அன்புமணி காட்டம்
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். வன்னியர்களுக்கு 10 புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளை தாமதிக்காமல் தமிழக அரசிடம் வழங்கக்கோரி, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.