இந்த மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டம்? - பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துவிட்டது என்றும், உரிய காலத்தில் தொடக்க விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.