11-ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில்... மாநில கல்விக் கொள்கையின் பரிந்துரை
கல்லூரி சேர்க்கையின் போது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமில்லாமல், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இரண்டையும் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு பரிந்துரை செய்திருக்கிறது. 500 பக்கங்களில் உருவாகியுள்ள மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தயார் செய்து மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால் தற்போது வரை அந்த அறிக்கையை தமிழக அரசு பெறாமல் உள்ளது . 500 பக்கங்களில் தயாராகியுள்ள அந்த அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .