``கட்சிக்கொடிய சொந்தமா நிலம் வாங்கி வச்சிக்கோங்க.. பொது இடத்தில் ஏன் அனுமதி?’’-ஐகோர்ட் மதுரை கேள்வி

Update: 2025-01-08 03:14 GMT

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுவான இடத்தில், கட்சிக்கொடிய வைக்க ஏன் அனுமதிக் கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் கட்சி கொடி மரத்தை வைத்துக் கொள்ளலாமே?, பொது இடத்தில் தான் கொடி கம்பங்களை வைக்க வேண்டும் என்றால் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துக் கொள்ளலாமே? என தெரிவித்தார். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏராளமான கட்சி கொடி கம்பங்கள் உள்ளதாக கூறிய நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்