17 மணி நேர ரெய்டு.. நள்ளிரவு 2.10க்கு ED அதிகாரிகள்.. பரபரப்பில் வேலூர்

Update: 2025-01-08 03:04 GMT

வேலூர் காட்பாடி அருகே, கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில், அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், 22ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை, 3 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், 5ம் தேதி விடியற்காலையில் நிறைவு பெற்றது. அப்போது, கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணினியின் ஹார்ட் டிஸ்க், வாங்கி ஆவணங்கள் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து விடுபட்ட இடங்களில், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 17 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, நள்ளிரவு 2.10க்கு நிறைவடைந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இந்த சோதனை தொடர்பாக, 22ம் தேதி சென்னையில் உள்ள அலுவலகத்தில் எம்.பி. கதிர் ஆனந்த் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்