தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் நள்ளிரவில் பரபரப்பு - சிக்கி துடித்த டிரைவர்
தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, காந்தி சாலைக்கு செல்வதற்காக திரும்பியது. அப்போது விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், லாரியின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி, கார் ஓட்டுநர் காருக்குள்ளேயே சிக்கி கொண்டார். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கார் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.