சீமான் மீது வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு - நீதிபதி உத்தரவு | Seeman | NTK | Trichy VarunKumar

Update: 2025-01-08 02:57 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்து சீமானும் அவருடைய கட்சியினரும் அவதூறான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருண் குமார் நீதிமன்றத்திற்கு நேரில் வந்திருந்தார். அவருடைய சார்பில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்