எலுமிச்சை பழம் பறிக்க சென்ற இடத்தில் பலியான 23 வயது இளம்பெண்.. கதறி துடிக்கும் உறவினர்கள்

Update: 2025-01-08 03:16 GMT

வரதாபுரம் கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வரி, தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள எலுமிச்சை மரத்தில் காய் பறிக்க முயன்றார். அப்போது காயை பறிப்பதற்காக பயன்படுத்திய கம்பி, வீட்டிற்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்