அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் கடந்த ஜூலை மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திருவிக தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 2-ம் தேதி இவரை பார்க்க, அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து 2 மாணவர்கள் வந்தபோது, அவர்களுக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசார் ராஜேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.