"பாஜக ஒரே குடும்பம் கையில தான் இருக்கணுமா? மோடி வந்தா நான் வரணுமா?" - அதிர்வை கிளப்பிய பாஜக தலைவர்

Update: 2024-03-18 06:43 GMT

"பாஜக ஒரே குடும்பம் கையில தான் இருக்கணுமா? மோடி வந்தா நான் வரணுமா?" - அதிர்வை கிளப்பிய பாஜக தலைவர்

மூன்றே நாட்களில் 2வது முறையாக கர்நாடகா வருகிறார் பிரதமர் மோடி...கர்நாடகாவில் குறைந்தபட்சம் 25 இடங்களை வெற்றி பெற வேண்டும் என பாஜக தீர்மானித்துள்ளது. மேலும் பிற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகாவில் மோடிக்கான வரவேற்பு அதிகம் உள்ளது என்பதால் கர்நாடக பாஜகவும் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக இடங்களை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடியை கடந்த பாராளுமன்றத் தேர்தலை காட்டிலும் இந்த பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதே திட்டமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை களபுருகியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று ஷிமோகாவில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எடியூரப்பா மகன் ராகவேந்திராவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஈஸ்வரப்பா பங்கேற்கப் போவதில்லை என கூறியுள்ளார். தனது மகனுக்கு சீட்டு வழங்கப்படாததால் கோபமடைந்துள்ள ஈஸ்வரப்பா, சிவமோகாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளார். மேலும் பாஜக ஒரு குடும்பத்தின் கையில் மட்டுமே இருக்கும் நிலையை மாற்றவே சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார். மோடியின் பிரசாரமும், ஈஸ்வரப்பாவின் செயல்பாடுகளும் கர்நாடகா அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரதமரின் வருகையை ஒட்டி ஷிமோகா நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதல் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்