"மன்னிக்க முடியாது.. இவர்களை விட்டுவைக்கக்கூடாது.." -கோபம் கொப்பளிக்க மோடி ஆவேசம்

Update: 2024-08-25 17:05 GMT

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதற்கு பெண்களே பெரும் பங்கு வகிப்பார்கள் என்றார். முந்தைய அரசாங்க‌ங்களை 70 ஆண்டுகளை ஒரு பக்கத்திலும், தன்னுடைய 10 ஆண்டுகளை மறு பக்கத்திலும் வைத்து பார்த்தால், நாடு சுதந்திரம் அடைந்த‌தில் இருந்து யாரும் செய்யாத‌தை விட பெண்களுக்கு தன்னுடைய அரசு செய்த‌து அதிகம் என்று பெருமிதம் தெரிவித்தார். அரசால் கட்டப்படும் வீடுகளை பெண்களின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்ற மோடி, குற்றவாளி யாராக இருந்தாலும் தப்பக்கூடாது என்றும், உதவி செய்பவர்களையும் விட்டுவைக்கக்கூடாது என்றும் ஆவேசமாக கூறினார். கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, மருத்துவமனை, பள்ளி, அலுவலகம் அல்லது எந்த மட்டத்திலும் அலட்சியமாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்