குண்டுவெடிப்பில் அவிழும் முடிச்சுகள்..! மார்ட்டினின்துபாய் நண்பர்கள் சொன்ன பரபரப்பு தகவல்
கேரளாவின் களமசேரி குண்டு வெடிப்பில், கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின் குறித்து அவருடன் துபாயில் பணிபுரிந்த சக ஊழியர்கள் பரபரப்பு தகவல்களை அளித்துள்ளனர்.
கொச்சி அருகே களமசேரியில் உள்ள திருச்சபையில், டொமினிக் மார்ட்டின் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியதில், 12 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துபாயில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த டொமினிக் மார்ட்டின், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது உறவினர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி கேரளா திரும்பியது விசாரணையில் தெரியவந்தது. தாயகம் திரும்பிய சில நாட்களிலே தனக்கு அக்டோபர் இறுதி வரை விடுப்பை நீட்டித்து தருமாறும், அக்டோபர் 30 ஆம் தேதி பணிக்கு திரும்பி விடுவதாகவும் டொமினிக் மார்ட்டின் தெரிவித்தாக அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளாக தங்களுடன் பணிபுரிந்து வந்த டொமினிக் மார்ட்டின், பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்டார் என்பதை நம்பவே முடியவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.