கல்லூரி மாணவி - இளைஞர் காரில் தீக்குளித்து தற்கொலை - அதிர்ச்சி
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில், கான்பூர் சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எந்தது. இந்த தீ விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வாடகைக்கு எடுத்த காரில் காதல் ஜோடி
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தனர். ஐதராபாத்தில் சைக்கிள் கடை நடத்தி வந்த ஸ்ரீராம் என்ற 26 வயது இளைஞரும், லிகிதா என்ற 16 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையாக இருப்பதை பார்த்த சிலர் ஸ்ரீராமை மிரட்டி பணம் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்த அவர்கள் இருவரும், செல்ஃப் டிரைவிங் என்று கூறி கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். கனாபூர் பகுதிக்கு சென்று, தங்களுடைய பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் காதல் பற்றி தெரிவித்தனர். தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக கூறிவிட்டு, பின்னர் காருக்குள்ளேயே அவர்கள் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தனர். இருவர் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.