கேரளாவில் காரின் பின்பக்க டயர் கழன்றி ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில், வேகமாக சென்ற காரின் பின்பக்க டயர், திடீரென தனியாக கழன்று சுமார் 20 மீட்டர் தூரம் சாலையில் ஓடிச்சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் சுதாரித்து, சாமர்த்தியமாக காரை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.