ட்ராக்கில் விழுந்த பெண்... மேலே கடந்து சென்ற ரயில்... உயிரோடு எழுந்து நின்ற அதிசயம்...
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தண்டவாளத்தின் நடுவே படுத்து பெண் ஒருவர் உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது. பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென சரக்கு ரயில் வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், தண்டவாளத்தின் நடுவே படுக்குமாறு கூச்சலிட்டனர். பதற்றத்திலும் சமயோஜிதமாக செயல்பட்ட பெண், தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர்தப்பினர்.