அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், இந்திய ராணுவத்தின் துருவ் வகை ஹெலிகாப்டர்கள் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் 330 துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 15 விபத்துக்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் போர்பந்தரில் துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு சோதனைக்காக துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படாமல், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.