புகுந்த திடீர் வெள்ளம்... பூமிக்கடியில் போராடும் உயிர்கள் - களமிறங்கிய ராணுவம்... பரபரப்பில் அசாம்
அசாம் - மேகாலயா எல்லை அருகே, டிமா ஹசாவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில், மழை காரணமாக வெள்ளநீர் உட்புகுந்தது. அப்போது பணியிலிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் சுமார் 20 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொறியாளர்களுடன் மீட்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய ராணுவத்தினர் மற்றும் அசாம் ரைபிள் படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.