இறந்தவருக்கு துணி வைத்து கட்டி நடந்த கொடூரம் - இரக்கமே இல்லையா? மனதை சுக்குநூறாக்கும் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள பிரேத பரிசோதனை கூடம் ஒன்றில், உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை, இரு கால்களிலும் துணியை கட்டி தரதரவென பரிசோதனை கூட ஊழியர்கள் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் உடலை இழுத்துச் சென்ற இரண்டு நபர்களும் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பதை உறுதி செய்து வருவதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்ட அலுவலர் ரம்வீர் சிங் தெரிவித்துள்ளார்.