மொபைல் வீடியோ கேம்-க்கு அடிமையான இளைஞர் தற்கொலை
புதுச்சேரியைச் சேர்ந்த சத்தியபாபு என்ற 29 வயது இளைஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்ராய்ட் போனில் வீடியோ கேம்ஸ்களை தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். வீட்டு வேலை செய்யும் அவரது தாயாரை வற்புறுத்தி சமீபத்தில் புதிய மொபைல் வாங்கி அதன் மூலம் வீடியோ கேம்ஸ் விளையாட்டை அதிக ஆர்வத்துடன் விளையாடியுள்ளார். யாரிடமும் பேசாமல், வேறு எந்த கவனமும் இன்றி வீடியோ கேம் விளையாடி வந்த அவரது கணக்கிலிருந்து சிறிய தொகைகளை வீடியோ கேம் செயலி நிறுவனம் எடுத்துள்ளது, இதனால் விரக்தியடைந்த சத்தியபாபு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரின் இரண்டு செல்போன்களை ஆராய்ந்து வருகின்றனர்.
Next Story