காட்டுத்தீயில் கருகிய 1000 ஆண்டு பழமையான கோயில் - பறிதாபமாய் இறந்த உயிர்கள்
தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் எரிந்தது. செஞ்சாங் (SANCHEONG) பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல், தென்கொரிய தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.
அங்கு உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ பிடித்த நிலையில், அங்கு இருந்த துறவிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். அதே நேரத்தில், 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.