"18 வருடங்களாக தொடர்ந்து செய்கிறோம்..திருப்தியாக இருக்கு.." - விநாயகரை காண வந்த பக்தர்கள் பேட்டி

Update: 2025-01-01 07:38 GMT

#Sivaganga

"18 வருடங்களாக தொடர்ந்து செய்கிறோம்..திருப்தியாக இருக்கு.." - விநாயகரை காண வந்த பக்தர்கள் மகிழ்ச்சி பேட்டி

உலகப் புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்... மூலவர் கற்பக விநாயகர் தங்கக் கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனர்... ஆண்டின் முதல் நாளில் முழுமுதற்கடவுளாக போற்றப்படுகின்ற விநாயக பெருமானை தரிசனம் செய்தால் நன்மை எனக்கூறி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மனமுருக விநாயகரை வழிபட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்