மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

Update: 2025-01-04 03:23 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்ப்பேட்டை அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் சென்ற தனியார் பேருந்து, மின்கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் சென்று திரும்பிய போது, அருதங்குடி என்ற இடத்தில், ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மின்கம்பத்தில் பேருந்து மோதியதால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்