கொரோனா போல இன்னொரு பெருந்தொற்றா?..பீதியில் உலகம்.. இந்தியாவில் என்ன நிலை? - அதிகாரப்பூர்வ தகவல்
கொரோனா கண்டறிந்து 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
HMPV என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவிலும் இந்த வைரஸ் குறித்த அச்சமும் கவலைகளும் எழுந்துள்ள நிலையில், இந்த வைரஸ் குறித்து இந்தியாவில் கவலைப்படவும் அச்சப்படவோ அவசியம் இல்லை என சுகாதார சேவைக்கான பொது இயக்குனர் அதுல் கோயல் தெரிவித்துள்ளார்.
HMPV என்பது ஜலதோஷத்தை ஏற்படுத்தும் ஒரு சாதாரண சுவாச பிரச்சனை என்றும் இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.