ஓட ஓட ஒருவரை கடித்தே கொன்ற அந்த உயிரினம்..பேரதிர்ச்சியில் மக்கள் | Nilgiris

Update: 2025-01-04 03:27 GMT

உதகை அருகே உள்ள பிக்கட்டி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ், தேயிலை பறிக்கச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியபோது, வனவிலங்கு தாக்கி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சகதொழிலாளர்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சதீஷின் உடலை மீட்டு, அவரை தாக்கியது சிறுத்தையா? அல்லது கரடியா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து சதீஷின் உடல், பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த பகுதியில் 2 மாதமாக கரடி தொந்தரவு அதிகரித்துள்ளதகவும், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியும் சத்தியமூர்த்தி நகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த வனத் துறை அதிகாரிகள், சதீஷை தாக்கிக்கொன்ற வனவிலங்கு சிறுத்தையா அல்லது கரடியா என விசாரணை நடைபெற்று வருவதாகவும், உடனடியாக அதனை பிடிக்க வன விலங்கை பிடிக்க கூண்டு வைப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர், இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்