தமிழக மக்களுடைய பாதுகாப்பின் மீது அக்கறையுள்ள முதலமைச்சராக இருந்தால், அண்ணா பல்கலை. விவகாரத்தை, சிபிஐ விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதலில் சிபிஐ விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி தான் உத்தரவிட்டார் என்று கூறினார். விசாரணையை எடுத்துக் கொள்ள தாமதமானதால் மாநில போலீஸ் விசாரணை மேற்கொண்டதாகவும், அதன் பின் சிபிஐ வந்தவுடன் அதனிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினார்.