பஞ்சர் போடும் போது வெடித்த ஏர் சிலிண்டர்.. சிதைந்த டிராக்டர்.. 4 பேருக்கு நேர்ந்த கதி?
பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஐயப்பன் என்பவர் டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றி சென்றார். டிராக்டரானது சரவணம்பாக்கம் கூட்ரோடு சாலையில் சென்ற போது, டிராக்டர் டயரில் பஞ்சர் ஏற்பட்டது. இதனையடுத்து நடமாடும் பஞ்சர் வாகனத்தை வரவழைத்து, பஞ்சர் சரி செய்யப்பட்டது. அப்போது நடமாடும் பஞ்சர் வாகனத்தில் இருந்த ஏர் சிலிண்டர் வெடித்து, ஐயப்பன், பஞ்சர் வாகன உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.