மர்ம விலங்கு கடித்து 26 ஆடுகள் பலி- விவசாயிகள் அதிர்ச்சி
ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து 26 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் கிராமத்தில் பரமசிவம் என்பவரின் தொழுவில் வளர்க்கப்பட்ட 11 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதேபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரின் 15 ஆடுகளும் மர்ம விலங்கின் தாக்குதலுக்கு பலியாகி கிடந்தன. ஒரே நாளில் 26 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாய்கள் தாக்குதல் இல்லை எனவும், குள்ளநரி போன்ற மர்ம விலங்கு கடித்து பலியாகி இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Next Story