காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- இந்தியாவில் இதுவரை ஐந்து பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி... தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு...
- HMPV வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை.... கட்டுப்படுத்த கூடியது தான் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்... நோய் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.... ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு புகார்கள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் அதிரடி...
- மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்... ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், முடங்கிய இணையதளம் மீண்டும் சீரானது...
- தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தகவல்... திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்....
- ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், உரை நிகழ்த்தாமல் வெளியேறினார், ஆளுநர் ஆர்.என்.ரவி... தேசியகீதம் பாடாததால், வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம்... சட்டப்பேரவை நடவடிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நினைவூட்டுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்...
- சட்டப்பேரவையில் ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்... ஜனநாயக மரபை மீறுவதையே ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு... ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிப்பு....
- சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.........
- ஆளுநர் உரையாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து குறிப்பை வெளியிட்ட சட்டபேரவைச் செயலகம்... உரை தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிந்த பின் தேசிய கீதமும் இசைக்கப்படும் என விளக்கம்...
- ஆளுநர் வெளியேறியதால் அரசியல் அரங்கில் விவாதம் கிளம்பிய சூழலில், இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை... இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படும் என அறிவிப்பு...
- அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஐஸ் ஹாக்கி போட்டி... மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் டெடி பியர்களை வீசியெறிந்து, ரசிகர்கள் கொண்டாட்டம்...