கன்றுக்குட்டி, 17 கோழிகளை கொன்று சாப்பிட்ட சிறுத்தை - பீதியில் உறைந்த மக்கள்
கே வி குப்பம் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் மைலாப்பூரை சேர்ந்த ராஜா என்பவரின் பசுமாடு மற்றும் கன்று குட்டியை சிறுத்தை தாக்கியுள்ளது. அதில் பசுமாடு படுகாயம் அடைந்த நிலையில், கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதேபோல் ஓங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேலன் என்பவரின் கன்றுக்குட்டி மற்றும் கோழிகளை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. இதனால் கிராம மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.