நிலை மாறிய வங்கக்கடல்... 300அடி உள்வாங்கிய கடல்... வெளியே தெரிந்த காட்சி - பரபரப்பில் வேதாரண்யம்

Update: 2024-12-09 11:07 GMT

நாகை மாவட்டம், வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில், இன்று காலை சுமார் 300அடி தூரம் கடல் நீர் திடீரென்று உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள சேற்றுப் பகுதி வெளியே தெரிகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 11ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடல் திடீரென்று உள் வாங்கியுள்ளதால் மீனவர்களும் பொது மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்