2 வருடத்திற்கு பின் நடந்த நகர்மன்ற கூட்டம்.. மாறி மாறி கடும் வாக்குவாதம் - பெரும் பரபரப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கூடிய செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செங்கோட்டை நகர் மன்ற தலைவி ராமலக்ஷ்மி அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறிய நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில், கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில் 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.