வயிறு வலியில் கத்திய சிறுமி - ஹாஸ்பிடல் கூட்டி சென்ற பெற்றோருக்கு பேரதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மதபோதகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். செம்பருத்திவிளையை சேர்ந்த மதபோதகர் ஜாண்ரோஸ் என்பவர் தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் பெற்றோர் உடன் இருந்த 13 சிறுமியை பிரார்த்தனை என்ற பெயரில் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் வயிற்று வலி ஏற்பட்ட சிறுமி, கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மதபோதகர் ஜாண்ரோஸை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தற்போது அந்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.