திருப்பத்தூரில், 200 சவரன் போலி நகைகளை வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர். கடந்த 14 ஆண்டுகளாக காந்திபேட்டையில் உள்ள அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த பாஸ்கர், சுமார் 42 பேரை வாடிக்கையாளர்களாக போலியாக ஏற்பாடு செய்து, போலி நகைகளை வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். அதிகாரிகள் தணிக்கையில் இது கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.