கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை - சென்னையில் கல்லூரி மாணவன் கைது | IPL Tickets
சென்னை எழும்பூரில் சென்னை-மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஆனந்தராஜ் என்ற கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தனியார் வங்கிக்கு கொடுக்கப்பட்ட ஸ்பான்சர் டிக்கெட்டுக்களை அந்த மாணவன் ஆன்லைன் மூலம் விற்று வந்தது தெரியவந்தது.