இதுவரை இல்லாத தாக்கம்... "காலை 11 மணி டூ மதியம் 3 மணி வரை வெளியே செல்லாதீர்"
இதுவரை இல்லாத தாக்கம்... ரெடியான தமிழக அரசு - காலை 11 மணி டூ மதியம் 3 மணி வரை வெளியே செல்லாதீர்
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிப்பு
நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாத பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைப்பு
சிறப்பு வார்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 20 படுக்கைகள் உள்ளன
தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன
ஓ.ஆர்.எஸ்., ஆக்சிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன
பிரத்யேக வார்டுகளுக்கு சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் நாளை முதல் 23ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்க கூடும்
2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், பருத்தி உடைகள் அணிய வேண்டும்