ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நடந்த திடீர் மாற்றம் - வெளியான வைரல் வீடியோ
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 500 கன அடியிலிருந்து 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதன் காரணமாக தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. இதனால் பாறைகளாக காட்சி அளித்த ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது.